கிளிநொச்சி – பூநகரி பகுதியில் விபத்து : வைத்தியர் உயிரிழப்பு!
In இலங்கை March 7, 2018 12:46 pm GMT 0 Comments 2211 by : Ravivarman

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் – மன்னார் பிரதான வீதி (A-32) மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிக வேகமாகச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியுள்ளது. குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதான வைத்தியர் அரவிந்தன் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.