கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம்
In இலங்கை December 17, 2020 9:31 am GMT 0 Comments 1421 by : Dhackshala
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பகல் 2 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் விவசாயம், கல்வி, பாதுகாப்பு, சிவில் நிர்வாகம், போக்குவரத்து, கடற்தொழில், வீட்டுத் திட்டம், காணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
குறித்த கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், நா.ம.உறுப்பினர்களான சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், திணைக்களங்கள் சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.