கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒருவர் போராட்டம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக ஒருவர் இன்று காலை போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
தனது காணியின் ஊடாக கழிவு நீர் வாய்க்கால் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாலிகிதன் முற்பட்டதாகவும் அதற்கு அரசாங்க அதிபர் தெளிவான பதிலை வழங்க வழங்க வேண்டும் என தெரிவித்தே குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் இல்லாத நிலையில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் குறித்த நபருடன் கலந்துரையாடினார்.
தீர்மானம் எடுக்க கூடியவர் அரசாங்க அதிபர் என்பதால் அவர் வருகை தந்ததும் அவருடன் பேசி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்த நிலையில் குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.