கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!
In இலங்கை May 1, 2019 10:58 am GMT 0 Comments 2526 by : Jeyachandran Vithushan

கிழக்கு மாகாணத்தின் 3 பகுதிகளில் இன்று (புதன்கிழமை) இரவு முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை ஆகிய இடங்களில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் குறிப்பாக கிழக்கின் பல பகுதிகளில் தொடர் சோதனைகளில் பல வெடிபொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே இன்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.