கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
In இலங்கை February 1, 2021 9:18 am GMT 0 Comments 1408 by : Yuganthini
இலங்கை அரசு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை துறைமுக அதிகாரசபையின் வாயிலில் அதன் ஊழியர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பேரணியாக ஒன்று திரண்டு, திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கு கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இலங்கை அரசானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை மாத்திரமல்லாது தெற்கு பகுதியினைக்கூட தாரை வார்ப்பதற்கு தயாராகிவருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.