கிழக்கு முனையம்: தொழிற்சங்கங்களின் யோசனை திட்டம் கையளிப்பு
In இலங்கை January 16, 2021 9:47 am GMT 0 Comments 1267 by : Jeyachandran Vithushan

கொழும்பு முறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக 23 துறைமுக தொழிற்சங்கங்கள் இணைந்து தயாரித்துள்ள யோசனை திட்டம் இன்று அரச தரப்பிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணை துறைமுக விவகாரங்களை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இன்று (சனிக்கிழமை) கையளிக்கப்படவுள்ளது.
கிழக்கு முனையத்தில் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படும் 49 வீத உரிமமானது எந்த விதத்திலும் நாட்டிற்கு நன்மை பயக்காது என குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு முறைமுக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.
இந்நிலையில் இது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்களிடம் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் இணைந்துதயாரித்துள்ள குறித்த யோசனை திட்டம் இன்று கையளிக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.