கிழக்கை உலுக்கிய சத்துருக்கொண்டான் இனப்படுகொலை நினைவு தினம் இன்று!
தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ள ஆறாத வடுக்களில் கிழக்கை உலுக்கிய இலங்கை படையினரின் திட்டமிடப்பட்ட மற்றுமொரு இனப்படுகொலையின் நினைவு தினம் இன்றாகும்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இதே போன்றதொரு நாளின் மாலை வேளையிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 28 ஆண்டுகள் ஆகின்றன. அதனை முன்னிட்டு உயிரிழந்த மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூறும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்;டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் 186 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.