குடியரசு தின விழாவை கொண்டாடும் இந்தியாவுக்கு இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வாழ்த்து
In இந்தியா January 26, 2021 3:50 am GMT 0 Comments 1375 by : Yuganthini

இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 72ஆவது குடியரசு தின விழா மக்களினால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டர் ஊடாக தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெரும்பாலான அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் இந்திய நாட்டின் 72ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.