குட்கா ஊழல் விவகாரம்: தரகர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைது!

குட்கா ஊழல் விவகாரத்தில், தரகர்களாக செயற்பட்டனர் என்ற சந்தேக குற்றச்சாட்டில் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முழுவதும் 40 இடங்களில் சி.பி.சி.ஐ அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இவர்கள் தரகர்களாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ராஜேஸ் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மொத்தம் 35க்க மேற்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சோதனை இன்றும் சில இடங்களில் தொடர்ந்தது. இந்நிலையில் மேற்படி இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.