குணால் கோஹ்லி இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக தமன்னா!
In சினிமா November 10, 2018 8:50 am GMT 0 Comments 1154 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

மும்பை நடிகையான தமன்னா தென்னிந்திய சினிமாவில் தற்போது 8 படங்கள் கைவசம் இருக்க அடுத்தப்படியாக ஹிந்திப்பட இயக்குநர் குணால் கோஹ்லி, தெலுங்கில் இயக்கும் நெக்ஸ்ட் என்டி என்ற படத்தில் நடிக்கிறார்.
நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.
படத்தில் சந்தீப், தமன்னா இருவரும் கணவன் – மனைவியாக நடிக்கிறார்கள். ரொமான்ட்டிக் படமாக இப்படம் யதார்த்த கதையில் உருவாகிறது.
மேலும் “நான் நடித்த படங்களில் வித்தியாசமான கதை இது. அதனால் இப்படத்தை எனக்கு கிடைத்த ஸ்பெசல் படமாக கருதுகிறேன்” என தமன்னா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.