குண்டுதாக்குதல்களின் எதிரொலி – சஹரானின் மைத்துனர் சவூதி அரேபியாவில் கைது!
In இலங்கை May 4, 2019 10:06 am GMT 0 Comments 5744 by : Dhackshala

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசீமின் மைத்துனர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் சவூதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் மாற்று பெயர்களில் இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு சென்றுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் பயங்கரவாத தாக்குதலுக்கு தாமே காரணம் என ஐ.எஸ் அமைப்பு பொருப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.