குண்டுத்தாக்குதல்கள் – விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக FBI அறிவிப்பு
In இலங்கை April 24, 2019 5:53 am GMT 0 Comments 2640 by : Dhackshala

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்திய புலனாய்வு பிரிவு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெறாலாமென எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கவைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
அதற்கமைய குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்திய புலனாய்வு பிரிவு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.