குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!
In ஆசிரியர் தெரிவு April 21, 2019 2:51 pm GMT 0 Comments 2682 by : Varshini
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 32 வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனா, பெல்ஜியம், அமெரிக்க மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் பல நட்சத்திர விடுதிகள் இலக்குவைக்கப்பட்ட நிலையில், அங்கு தங்கியிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 450இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.