தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்கள் இருவர் CIDயிடம் ஒப்படைப்பு
In இலங்கை April 28, 2019 4:22 am GMT 0 Comments 2554 by : Dhackshala

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்கள் இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் சாதிக் அப்துல் ஹக், மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் ஆகிய இருவருமே இவ்வாறு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென பொலிஸாரினால் இனங்காணப்பட்டு அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
5 சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்ட பொலிஸார் அவர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மக்களிடமும் கோரியிருந்தது. இந்நிலையில் அவர்களில் பெண் ஒருவரை மாவனெல்ல பகுதியில் வைத்து பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.