குண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது!
In ஆசிரியர் தெரிவு April 22, 2019 2:53 am GMT 0 Comments 2322 by : Krushnamoorthy Dushanthini

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 8 இடங்களில் தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 13 பேர் மாலை வரை கைதுசெய்யப்பட்டனர். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் மேலும் 8 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல்களால் இதுவரை சுமார் 240இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 450இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.