குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த!
In இலங்கை April 22, 2019 8:11 am GMT 0 Comments 2065 by : Krushnamoorthy Dushanthini

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு விடுத்திருந்தால் அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். எனவே இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்குமானால், அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாம். எனவே,குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இது தேசிய பிரச்சினையாகும். எனவே எதிர்க்கட்சி என்ற வகையில் அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவோம்.’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.