குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை April 19, 2019 5:09 am GMT 0 Comments 1977 by : Dhackshala

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த நபர் பொத்துவில் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் 29 வயதுடையவரென தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அவரது சடலத்தை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குமண தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.