குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பது குறித்து விளக்கமளித்தார் சிவன்!
In இந்தியா December 2, 2019 11:21 am GMT 0 Comments 1385 by : Krushnamoorthy Dushanthini

குலசேகரப்பட்டினத்தில் ரொக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் வேலை தொடங்கியுள்ளது.
நேராக தெற்கு நோக்கி ரொக்கெட்டை ஏவ வேண்டும் என்றால் ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால் தான் சாத்தியப்படும். அப்படிபார்த்தால் குலசேகரப்பட்டினம் சரியாக இருக்கும்.
தற்போது ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ரொக்கெட்டை ஏவ முடியவில்லை. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க மற்றொரு முக்கிய காரணம் நெல்லை மாவட்ட மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையம். இது பி.எஸ்.எல்.வியின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலை இஞ்சின்களை ஒருங்கிணைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ள நிலையில், மேலும் ஒரு ஏவுதளத்தை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.