குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிப்பு
In இலங்கை January 11, 2019 7:22 am GMT 0 Comments 1294 by : Dhackshala

தெமட்டகொடை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை குலதிஸ்ஸ கீகனகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 28 ஆம் திகதி தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.