குவைத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு!

குவைத்தில் நாளை சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது
குறைந்த எண்ணெய் விலை மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பணப்புழக்க நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நேரத்தில் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.
அத்துடன், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய, மாநில நிதிகளை அரசு அதிகரிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் கொரோனா நெருக்கடி காரணமாக வேட்பாளர்கள் இணையம், தொழில்நுட்பத் தொடர்பாடல் மூலம் தமது பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, குவைத்தில் இன்றைய நிலைவரப்படி கொரோனா தொற்றினால் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் பாதிக்கப்பட்டும் 900 பேர் மரணித்தும் உள்ளனர்.
இந்நிலையில், இம்முறை தேர்தலில் வாக்காளிப்பு வீதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.