கென்யாவில் ஆரம்ப பாடசாலையில் ஏற்பட்ட நெரிசலில் 14 மாணவர்கள் உயிரிழப்பு!

மேற்கு கென்யாவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஏற்பட்ட நெரிசலில் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் ஜார்ஜ் மாகோஹா உறுதிப்படுத்தியுள்ளதோடு, தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஒரு குழந்தையின் இழப்பு மிகவும் வேதனையானது, குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு எனது இரங்கல்’ என குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் நைரோபியின் வடமேற்கில் உள்ள காகமேகா ஆரம்ப பாடசாலையில் நேற்று (திங்கள்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் 40பேர் காயமடைந்துள்ளதாகவும், 20 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காகமேகா மத்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் பாடசாலை முடித்து சிறார்கள் வெளியே வரும்போது திடீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் பல சிறார்கள் கீழே விழுந்துள்ளனர்.. மூச்சுத்திணறல், மற்றவர்கள் மேலே விழுந்து அழுத்தியது உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.