கெமரூனில் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் கடத்தல்!
கெமரூனில் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினாலேயே இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கெமரூன் நாட்டிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் பயங்கரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கும் கெமரூன் நாட்டில், இடம்பெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவமானது அந்த நாட்டில் தனி நாடு கோரி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.
அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், சாரதி ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.