கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்
In இலங்கை February 12, 2021 5:27 am GMT 0 Comments 1288 by : Dhackshala
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான பரீட்சார்த்திகள் இந்த பரீட்சை நிலயைங்களில் பரீட்சை எழுதலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுயதனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து பரீட்சை செய்யப்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.