கேப்பாபுலவில் கறுப்புக் கொடி போராட்டம்!
தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், இன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்.பேருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம உரிமை இயக்கத்தினால், “போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்“ என்ற தொணிப் பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் வலியுறுத்தப்பட்டது.
இதேபோன்று இன்றைய நாளை கறுப்பு நாளாக பிரகடனம் செய்து கேப்பாபுலவு மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி, பல கடந்த வருடங்களாக போராடி வரும் மக்கள், இன்றைய நாளைக் கரிநாளாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக இன்றைய ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கலகழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.