கேரளத்தில் பறவைக் காய்ச்சல்: மனிதர்களுக்கு பரிசோதனை
In இந்தியா January 6, 2021 1:37 pm GMT 0 Comments 1374 by : Jeyachandran Vithushan

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக மனிதர்களுக்கும் அறிகுறிகள் உள்ளனவா என்பது பரிசோதனை செய்யப்படுவதாக கோட்டயம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோட்டயத்தில் ஒரே இடத்தில் ஆயிரத்து 600 வாத்துகள் இறந்துள்ளன.
இதையடுத்து கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது.
இதனையடுத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் பரிசோதிக்கப்பட்டன என கோட்டயம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலுக்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்த பரிசோதனைகள் தொடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.