கேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ; வரவு செலவு திட்டத்தில் அறிவிப்பு!
In இந்தியா January 15, 2021 5:33 am GMT 0 Comments 1358 by : Krushnamoorthy Dushanthini

கேரளாவில் 8 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் சட்ட சபை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியது. இதன்போது நிதியமைச்சர் தாமஸ் ஐசக் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “பல்கலைக்கழகங்களில் 1000 புதிய பதவிகள் உருவாக்கப்படும், உயர்கல்வித் துறையில் 800 காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
சுகாதாரத்துறையில் 8000 புதிய பதவிகள் உருவாக்கப்படும். சமூக நல ஓய்வூதியங்கள் 100 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் மாத ஓய்வூதியம் 1600 ரூபாயாக அதிகரிக்கும்.
அனைவருக்கும் மலிவு விலையில் இணையதள வசதி வழங்கும் முதன்மை திட்டத்தின் முதல் கட்டமான கே-ஃபோன் அடுத்த மாதம் நிறைவடையும்.
கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றான ரப்பரின் அடிப்படை விலை 170 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வருவாயை உயர்த்த உதவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.