கேரளா வெள்ளம் திரைப்படமாகிறது!

அண்மையில் கேரளாவில் இடம்பெற்ற கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வரலாறு காணாத பாதிப்புக்களை கேரளா எதிர்கொண்டது. இந்தப் பாதிப்புக்களிலிருந்து மீள இன்னும் நீண்ட காலம் தேவைப்படுகிறது.
இதனிடையே இவ் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்தனர். கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலச்சரிவில் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்டதில் அந்தந்த பகுதி மீனவர்களும், துணை இராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள்.
எனவே இவர்களை கௌரவப்படுத்தும் விதமாக மலையாளத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது.
‘2403 பீட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, நிவின்பாலி-நஸ்ரியா இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’ என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான ஜூட் ஆன்டனி ஜோசப் இயக்கவுள்ளார்.
அதோடு படத்திற்கான போஸ்டரையும் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.