கோப் குழுவுக்கு இரு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
In இலங்கை January 19, 2021 6:58 am GMT 0 Comments 1269 by : Yuganthini

அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கூடிய நாடாளுமன்ற அமர்விலேயே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோரே கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப் குழு உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.