கொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு வலியுறுத்தல்!

கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆபிரிக்க ஒன்றியம் கொங்கோ அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் பேன் ஆபிரிக்க அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், கடந்த வாரம் கொங்கோ தேர்தல் ஆணையகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகள் தீவிர சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஆபிரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சி வேட்பாளர் பெலிக்ஸ் ஷிசேகெடிக்கு வெற்றியை அளித்துள்ள போதிலும், தற்போதைய அரச நிர்வாகத்தின் எதிர்ப்பாளரான மார்ட்டின் ஃபயூலு, தானே வென்றதாக வலியுறுத்துகிறார். எவ்வாறாயினும் இன்று மாலை அளவில் இறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.