கொட்டும் மழையிலும் மஹிந்த அணியினர் ஆர்ப்பாட்டம்!
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட பேரணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதி நோக்கி இந்த ஆர்ப்பாட்ட பேரணி நகர்வதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டங்களினைத் தொடர்ந்து மத அனுஸ்டானங்களுடன் மாநாட்டு கூட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிந்த அபேகுணவர்த்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மஹிந்த ஆதரவாளர்கள் கூடியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.