கொத்மலையில் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
கொத்மலை – வெதமுல்ல மற்றும் லிலிஸ்லேண்ட் தோட்டங்களிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.
கடந்த கால அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்திருந்தும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சீரற்ற காலநிலை நிலவும் வேளையில் அங்குள்ள வைத்தியசாலையிலும் பாடசாலையிலும் தங்குமாறு அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பணிக்கின்றார்கள். குறித்த தோட்டப் பகுதியைச் சுற்றிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றதால், அங்குள்ள மக்கள் அனைவரும் உயிரிழக்க வேண்டிய ஆபத்து காணப்படுகின்றது.
இத்தோட்டப் பகுதியில் மீண்டும் உயிரிழப்புக்களும் அழிவுகளும் இடம்பெறுவதற்கு முன்னர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் சுமார் 300ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.