News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி
  • கார்பன் அறிக்கை தாமதம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சந்தேகம்
  • வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  1. முகப்பு
  2. இலங்கை
  3. கொத்மலை பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் : தலைவராக சுசந்த ஜயசுந்தர தெரிவு

கொத்மலை பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் : தலைவராக சுசந்த ஜயசுந்தர தெரிவு

In இலங்கை     March 29, 2018 2:39 pm GMT     0 Comments     1724     by : Anojkiyan

கொத்மலை பிரதேச சபை தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தரவும், உப தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று (வியாழக்கிழமை) கொத்மலை பிரதேச சபை காரியாலயத்தில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைவருக்கான போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தரவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மகேஸ் கல்ஏதண்டவும் போட்டியிட்டனர்.

இதில் 30 வாக்குகளைப் பெற்று சுசந்த ஜயசுந்தர தலைவராக தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட மகேஸ் கல்ஏதண்ட 20 வாக்குகள் பெற்றார்.

இதையடுத்து உபதலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீரவும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரத்னம் சிவகுமாரும் போட்டியிட்டனர்.

இதில் மஹிந்த செனவீர 30 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட ரத்னம் சிவகுமார் 20 வாக்குகள் பெற்றார்.

53 உறுப்பினர்களைக் கொண்ட கொத்மலை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, மஹஜன எக்சத் பெரமுன சார்பாக இருவரில் ஒருவர் வாக்களிக்கவில்லை. அத்தோடு ஒருவர் தலைவர் தேர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், உப தலைவர் தேர்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் வாக்களித்தார் என்பதும் குறிப்பித்தக்கது.

கொத்மலை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 20 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 13 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 16 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 02 ஆசனமும், மஹஜன எக்சத் பெரமுன கட்சிக்கு 02 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • மஹிந்த – மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி உதயம்?  

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் நாளை விசேட ச

  • ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக மக்கள் அமைப்பு  

    ஊழலுக்கு எதிராக மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தி

  • சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை – சிசிர ஜயகொடி  

    சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்

  • 2020-இல் மொட்டு சின்னமே நாட்டை ஆளும்: ரொஷான் ரணசிங்க  

    2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நாட்டில் மொட்டு சின்னத்தின் ஜனாதிபதியே நாட்டை ஆட்சி செய்வார் என ஸ்ரீலங்

  • எரிபொருள் சூத்திரம் மக்களை ஏமாற்றும் செயல்: ஜி.எல்.பீரிஸ்  

    நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைச் சூத்திரமானது ஏமாற்றும் செயற்பாடாகும் என ஸ்ரீலங்கா


#Tags

  • Kotmala Pradeshiya Sabha
  • Mahinda Senaviera
  • Sri Lanka Peoples Paramunai
  • Susantha Jayasundera
  • United People's Freedom Alliance
  • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
  • கொத்மலை பிரதேச சபை
  • சுசந்த ஜயசுந்தர
  • மஹிந்த செனவீர
  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
    பிந்திய செய்திகள்
  • பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி
    பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி
  • வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
    வர்த்தகர்கள் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பொலிஸார் குவிப்பு (2ஆம் இணைப்பு)
  • வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
    வியட்நாமில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் கைது!
  • இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
    இராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஹரிஸ் ராவத்
  • துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)
  • ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
    ஜம்மு காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்
  • கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
    கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டி!
  • வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
    வடக்கில் முதற்தடவையாக இடம்பெறவிருக்கும் இதழியல் மாநாடு!
  • இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
    இலங்கை – சிம்பாப்வேக்கு இடையில் விமான சேவை ஒப்பந்தம்!
  • பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
    பெங்களூர் விமானக் கண்காட்சியில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து நாசம்!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.