கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாமா? – பிரதமரின் ஊடகப்பிரிவு விசேட அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு January 3, 2021 5:07 am GMT 0 Comments 2332 by : Dhackshala

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என இந்த விடயம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்களின் ஆய்வு அறிக்கைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக இதுவரையில் தெளிவுப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சினால் 11 பேர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. அத்துடன் மருத்துவ தரப்பினராலும் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டது.
இவ்விரு குழுக்களின் அறிக்கைகள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இதுவரையில் கவனம் செலுத்தப்படவில்லை.
இந்த நிலையிலேயே, சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் வெகுவிரைவில் அறிக்கையின் உண்மை தன்மை பகிரங்கப்படுத்தப்படும் என பிரதமரின் ஊடாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.