கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை December 17, 2020 9:57 am GMT 0 Comments 1377 by : Dhackshala

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்த 737 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் 26 ஆயிரத்து 353 பேர் குணமடைற்துள்ள நிலையில், 8 ஆயிரத்து 224 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 160 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.