கொரோனாவுக்கு இடமளிக்காது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள்- அங்கஜன்
In Uncategorized December 25, 2020 4:37 am GMT 0 Comments 1156 by : Yuganthini

கொரோனா எனும் கொடிய நோய்க்கு இடமளிக்காது தமது சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை அனுபவித்திடுங்கள் என யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இவ்வுலக வாழ்க்கையில் ஒளியேற்றுவதே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தமாகும்.
பாவத்திலிருந்து மீண்ட இயேசு பிரான் சகல மக்களுக்கும் காட்டிய ஆன்மீக வழியை நாமும் பின்பற்றி எம்மைப் பற்றியுள்ள சகல தீய எண்ணங்களையும் களைந்து அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றால் எமது மனங்களை நிரப்பிக் கொள்வோம்.
மனிதநேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல சக்திகளையும் மௌனிக்கச் செய்து, அமைதியான பாதையில் எதிர்காலத்தை பிரகாசமடையச் செய்ய இந்த நத்தார் பண்டிகை நல்வழிகாட்டியாக அமைய வேண்டும்.
அத்துடன் கொரோனா எனும் கொடிய நோயின் பிடியிலிருந்து இவ்வுலக மக்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமையும் எனவும் நம்புகிறேன்.
தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என்பதனை தாரக மந்திரமாகக் கொண்டு இம்முறை நத்தார் பண்டிகையை கொண்டாட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.