கொரோனாவுக்கு மத்தியில் தைத் திருநாளைக் கொண்டாட தயாராகும் தமிழர்கள்
In இலங்கை January 13, 2021 8:38 am GMT 0 Comments 1498 by : Dhackshala
உலகவாழ் இந்துக்களால் நாளையதினம் (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
அதன்படி தைத் திருநாளை முன்னிட்டு யாழ். மாவட்ட மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கரும்பு, பொங்கல் பானைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரனமாக யாழ். மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் பூட்டப்பட்டதால், வியாபாரிகள் வீதி ஓரங்களில் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் நடமாட்டம் அதிகரித்து கானப்படுவதால் வொலிஸார் மக்கள் ஒன்றுகூடுவதை தடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களும் தைத் திருநாளினை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.
தைப்பொங்கலினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக நகரங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வருகை தந்திருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானையினையும் கரும்புகளையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.