கொரோனா முடக்கம், அச்சத்துக்கு மத்தியில் வவுனியாவில் பொங்கல்!

வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை நகரப் பகுதிகளில் களையிழந்துள்ளதுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் இம்முறை பெரியளவில் களைகட்டியிருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப் பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், நகரில் அமைந்துள்ள முக்கிய ஆலயங்களில் இம்முறை பொங்கல் நிகழ்வோ பூசை அனுட்டானங்களோ பெரியளவில் இடம்பெற்றிருக்கவில்லை.
வவுனியா, ஆதிவிநாயகர் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து சிறியளவில் பொங்கல் நிகழ்வும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.