கொரோனா அச்சம் – இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் 3 வார்டுகளுக்கு பூட்டு
In இலங்கை January 7, 2021 2:59 am GMT 0 Comments 1374 by : Dhackshala

இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் 3 வார்ட்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் அனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.
தமது வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு எழுமாற்றாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வார்டொன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன், அங்கு சிகிச்சை பெற்று வந்த 9 நோயாளர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் வைத்தியசாலையின் 4 ஊழியர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வார்ட் மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இதுவரை 15 ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வைத்தியர் கூறினார்.
இந்த நிலையில், தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளை பேணிய 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் தற்போது ஆளனி பற்றாக்குறை நிலவுவதால், வைத்தியசாலையின் ஏனைய இரண்டு வார்ட்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.