கொரோனா அச்சம் – மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை January 6, 2021 6:15 am GMT 0 Comments 1388 by : Dhackshala

கொரோனா பரவல் காணரமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 248 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து 114 பேர், டோஹாவிலிருந்து 57 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
18 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் 513 இலங்கையர்கள் 19 விமான சேவைகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.