கொரோனா அச்சம்: வவுனியா மரக்கறி சந்தையில் பி.சி.ஆர்.பரிசோதனை
In இலங்கை December 28, 2020 3:26 am GMT 0 Comments 1373 by : Yuganthini
வவுனியா மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு இரண்டாம் கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.
நாட்டில் கொரோனா தொற்றிற்குள்ளாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு தரப்பினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மொத்த விற்பனை சந்தையில் பணிபுரியும் நூற்றிற்கும் மேற்பட்ட பணியாளர்களிற்கு கடந்தவாரம் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அவர்களில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் வவுனியா மரக்கறிச்சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய 140 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கட்டமாக, சுகாதார வைத்திய அதிகாரி பணிமையில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.