கொரோனா அச்சுறுத்தல்: காலியில் 7 கிராமங்களுக்கு பயணத்தடை
In ஆசிரியர் தெரிவு December 12, 2020 2:58 am GMT 0 Comments 1573 by : Yuganthini

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி மாவட்டத்தில் 7கிராமங்களுக்கு கடுமையான பயணக்தடை விதிக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதியில் 25கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு பயணக்தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமற்ற காரணத்திற்காக வீட்டில் இருந்து வௌியேற முடியாது என வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.