கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்தால் சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது – அமைச்சர்
In இலங்கை November 28, 2020 8:59 am GMT 0 Comments 1698 by : Jeyachandran Vithushan

கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை ஒத்திவைப்பதை தவிர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டபடி பரீட்சை நடத்தப்படுமா என்பது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எட்டப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளில் 5 ஆயிரத்து 100 பாடசாலைகள் மட்டுமே நவம்பர் 23 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டனஎன்றும் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான அச்சத்தை கருத்தில் கொண்டு நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகளை அதிகாரிகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,
குறிப்பாக இந்த நிலைமை தொடர்ந்தால் இந்த நிலையை கருத்தில் கொண்டு தீர்க்கமான முடிவு அடுத்த வாரம் எட்டப்படும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.