கொரோனா ஆபத்துள்ள 12 நாடுகளுக்கான பயணத்தடையை அறிமுகப்படுதியது சவுதி அரேபியா!

கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லாத நாடுகளுக்கும் மற்றும் புதிய உருமாறிய தொற்றுகள் பதிவான நாடுகளுக்கும் பயணிப்பதைத் தவிர்க்கும் வகையில், சவுதி அரேபியா 12 நாடுகளுக்கான பயணத்தடையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி லிபியா, ஏமன், லெபனான், துருக்கி, ஆர்மீனியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், சோமாலியா, பெலாரஸ், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக ஆபத்துள்ள நாடுகளில் உள்ள குடிமக்கள் உடனடியாக சவுதி அரேபிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உட்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணிக்க விரும்பும் சவுதி அரேபியர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்து, பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
பல நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகள், உறுதியற்ற தன்மை, கொரோனா வைரஸ் தொற்று மற்றும் புதிய உருமாறிய வைரஸ் பரவல் ஆகியவற்றின் மத்தியில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெறாமல் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுப்பதாக உட்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.