கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறது இந்தியா!
In இந்தியா January 20, 2021 2:51 am GMT 0 Comments 1354 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது.
இதன்படி நேபாளம், பங்களாதேஷ் , மியான்மர், பூட்டான், மாலைத்தீவுகள் மற்றும் செசலிஸ் ஆகியவற்றுக்கு கொவிட் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதனை நேற்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைத்து உலக மக்களுக்கும் இந்தியா தனது ஆதரவுக்கரம் நீட்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷஸ் போன்ற சில நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஒப்புதல் கிடைத்ததும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.