கொரோனா தடுப்பூசி குறித்த இறுதி தீர்மானம் இன்று
In ஆசிரியர் தெரிவு January 4, 2021 6:35 am GMT 0 Comments 1526 by : Jeyachandran Vithushan

இலங்கைக்கு எந்த கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகருமான லலித் வீரதுங்க தலைமையில் குறித்த குழு இன்று கூடுகின்றது.
இதன்படி, இலங்கையில் பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் வகை மற்றும் அதனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான காலப்பகுதி ஆகியன குறித்து இன்று தீர்மானிக்கப்படம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், நாட்டில் தடுப்பூசியினை விநியோகிப்பது குறித்த சுகாதார அமைச்சின் தேசிய தடுப்பூசி செயற்றிட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் வி கொவிட் -19 தடுப்பூசி தொடர்பான இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.