கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
In இந்தியா January 15, 2021 10:34 am GMT 0 Comments 1324 by : Krushnamoorthy Dushanthini

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி நாளை (சனிக்கிழமை) முதல் வழங்கப்படவுள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குறித்த தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில் அவசரகால அனுமதியின் அடிப்படையில் செலுத்தப்படவிருக்கும் கொரோனா தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேலுள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணியின் போது கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனைக் கூடங்களில் ஆய்வு நடத்தப்படவில்லை என்பதால், கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் உறுதி செய்யப்படாதவர்களுக்கும், பாலுட்டும் தாய்மார்களுக்கும் குறித்த தடுப்பூசி செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு மருந்து செலுத்திக் கொள்பவர்களுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் சிலருக்கு அரிப்பு, வலி ஏற்படலாம் என்றும், சிலருக்கு தலைவலி, மயக்கம் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே கோவாக்சின் மருந்து செலுத்திய இடத்தில் வலியும், செலுத்திக் கொண்டவர்களுக்கு தலைவலி, மயக்கம், காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, வாந்தி, அதிகமான வியர்வை, உடல் குளிர்தல், இருமல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம் போன்றவையும் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்தால் பாராசிட்டமால் (paracetamol) மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.