கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: உள்துறை அமைச்சு
In இந்தியா January 25, 2021 12:33 pm GMT 0 Comments 1364 by : Jeyachandran Vithushan

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முதல் இவை இரண்டும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முதன்மை நிலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.