கொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னா தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் அனுமதிக்காக மொடேர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மேலும், மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் தடுப்பூசி, கொரோனாவைத் தடுப்பதில் 94.1 வீதம் வெற்றி பெற்றுள்ளதாக மொடேர்னா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை. அமெரிக்காவில் ஏற்கனவே ஃபைசர் நிறுவனம் தடுப்பூசிக்கு உரிமம் கோரி கடந்த 20ஆம் திகதி விண்ணப்பித்திருந்ததது.
இந்நிலையில், இம்மாத இறுதியில் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் ஆய்வுக் கழக இயக்குநர் அந்தோனி பௌசி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.