கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களின் முழு விபரம்
In இலங்கை December 9, 2020 4:05 am GMT 0 Comments 1720 by : Dhackshala

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 526 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த ஒருவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது .
இதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 978 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம் இலங்கையில் இதுவரையில் 142 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.