கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறிகள்
In இலங்கை January 19, 2021 8:08 am GMT 0 Comments 2095 by : Dhackshala

கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வருவதாக விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நோய் அறிகுறி மூலம் நபரொருவரின் நாக்கு தொற்றுக்கு உள்ளாவதுடன், நாக்கிற்கு வெளிப்புறத்தில் காயங்கள், சிவந்த கொப்புளங்கள், சிவந்த புள்ளிகள் போன்றவை உருவாகும் என குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவரேனும் இந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன், அவர்களுக்கு மிக விரைவில் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்குகூட தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குழந்தை மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.